• Wed. Mar 29th, 2023

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்!

By

Sep 7, 2021 , ,

தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கைளை ஆட்சியர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்கைளை போக்குவரத்துத்துறை, காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின் போது வாகனத்தின் உட்புறம், முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகள் , தீயணைக்கும் கருவி மற்றும் வேகக்கட்டுப்பாட்டு கருவி ஆகியவற்றின் நிலை உள்ளிட்டவை குறித்து ஆராயப்பட்டது. பள்ளி வாகனங்களில் ஏதாவது குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரி செய்து மீண்டும் ஆய்விற்கு சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது.

மேலும், கொரோனா நோய்த்தொற்றினை கருத்தில் கொண்டு , அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் முறையாக கடைபிடித்து , தங்களது பள்ளிகளுக்குட்பட்ட வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் மாணவ , மாணவியர்கள் முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியினை பின்பற்றுதல் , கிருமிநாசினியினை கொண்டு அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை சரிவர பின்பற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *