சூர்யாவின் பிறந்த நாள் நாளான இன்று ரசிகர்ள் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் வாடிவாசல் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியாகி பட்டையைக்கிளப்பியுள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் தாணு நேற்றே வெளியிட்டுள்ளார். இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு மொத்தம் 5 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம் மற்றும் சிறந்த பின்னணி இசைஆகிய பிரிவுகளுக்காக சூரரைப் போற்று படத்திற்கு தேசிய விருது அளிக்கப்படவுள்ளது. இதையொட்டி சூர்யாவுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளார்கள். தம்பி சூர்யா என அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்திற்காக காளைகளுடன் சூர்யா பயிற்சி மேற்கொண்ட காட்சிகள், பிறந்த நாள் பரிசாக ரசிர்களுக்கு இன்று வெளியாக உள்ளது.