• Thu. Mar 28th, 2024

காஞ்சிபுரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல்வர்

Byமதி

Nov 29, 2021

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து அங்கு பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். தொடர்ந்து 3வது நாளாக நடைபெறக்கூடிய இந்த ஆய்வில், தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் ஆகிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெள்ள பாதிப்பு சேதங்களை நேரில் பார்வையிட்டார்.

வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளின் அருகில் இருக்கக்கூடிய ஏரிகள் நிரம்பியதாலும், அடையாற்றில் இருந்து வரக்கூடிய உபரிநீரின் காரணமாகவும் கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முழுக்கால் வரைக்கும் தண்ணீர் இருக்கக்கூடிய பகுதிக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார், மேலும் நேரடி ஆய்வும் மேற்கொண்டார்.

ஏற்கனவே வரதராஜபுரம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய முதல்வர், தற்போது முடிச்சூர் பகுதிகளில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு அரசி, பருப்பு, பெட்ஷீட், எண்ணெய், மளிகை பொருட்கள், பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். முதல்வருடன், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் வருவாய், பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *