தனது வீட்டில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் எப்பொழுதும் போல் நடைபெறும் கூட்டம் தான் எனவும் தற்சமயம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் தனக்கு வாக்களித்தவர்கள் கழக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதில் அவர்கள் பல்வேறு தகவல்களை தன்னிடம் வழங்கி உள்ளனர்.

இதன் அடிப்படையில் அவர்களுடைய கருத்துக்களை தற்போது கேட்டு வருகின்றேன் இது எப்பொழுதும் போல் நடைபெறும் நிகழ்வு தான் எனக்கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் தனக்கு முக்கியம் எனவும் தனது தொகுதியின் வளர்ச்சி மிகவும் முக்கியம் எனவும் 63,000 வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றியடைய வைத்த மக்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம் எனவும் எனவே அவருடைய கருத்துக்களை நான் முழுமையாக உள்வாங்கி உள்ளேன்.
அவர் கூறுகின்ற கருத்தின்படி எதிர்கால திட்டங்கள் அமையும் எனவும் ஆனால் தற்பொழுது தான் அதிமுகவில் தொடர்வதாகவும் தெரிவித்தார். மாற்றுக் கட்சியில் இணைவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அனைத்து தரப்பினர் முடிந்து கருத்துக்களை கேட்டு வருவதாகவும் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்வில் இருந்து வருகிறேன் எனவும் 2001 ஆம் ஆண்டு முதல் மக்கள் பணியில் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் கோவிட் காலத்தில் தமிழக முழுவதும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அயராமல் உழைத்ததாகவும் மாவட்டம் சிறப்பாக விளங்குவதற்கு காவிரி வைகை குண்டார் போன்ற நீண்ட கால திட்டங்களை கொண்டு வருவதற்கு பாடுபட்டதாகவும் தெரிவித்தார் தான் தற்பொழுது அதிமுகவில் தொடர்வதாக இருப்பதாக நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

எனவும் கட்சியை விட்டு செல்ல வேண்டும் மாற்று கட்சி நினைவிடம் என தான் முடிவுகளை பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் விருப்பத்திற்கு விட்டு விட்டதாகவும் அவர்கள் கூறுகின்ற கருத்தின் அடிப்படையில் தன்னுடைய முடிவு இருக்கும் எனவும் தெரிவித்தார் எப்பொழுது போல் நடைபெறும் சந்திப்பை தான் இன்றும் தனது வீட்டில் நடத்தியதாகவும் ஆனால் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அது மிகப்பெரிய விஷயமாக பேசப்படுவதால் தற்போது நான் செய்தியாளர்களை சந்திப்பதாகவும் தெரிவித்தார் தனக்காக உழைத்த உழைப்பாளர்கள் கட்சியினர் பொதுமக்களே தனக்கு தற்போது முக்கியம் எனவும் என தெரிவித்தார்
தொடர்ந்து தான் மாற்றுக் கட்சியில் இணைய போகிறேனா இல்லையா என்பதை கடைசி வரை கூறாத முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ அவருடைய பேச்சின் அடிப்படையிலும் அவருடைய செயல்பாடுகளையும் வைத்து பார்க்கும் பொழுது அவர் தமிழக வெற்றி கணக்கத்தில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்பதை அவர் வாயால் சொல்லாமல் தன்னுடைய செயல்களிலேயே சொன்னதையே திருப்பித் திருப்பி கூறியதுதான் இன்றைய பிரத்தியேக பேத்தியின் ரம்சமாக அமைந்தது.





