• Thu. Jun 11th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

உலக பட்டினி தின அன்னதானம் வழங்கிய கருப்பையா எம்.எல்.ஏ.,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பாக உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஏழை, எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்குபேரூர் செயலாளர் பசுமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ் ணன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். எம்.வீ. கருப்பையா எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் வழக்கறிஞர் தியாகராஜன்,ஒன்றிய செயலாளர் தமிழன் தாமு, பேரூர் இணைச் செயலாளர் ஆண்டனி, சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் நந்த கோபால், கழக நிர்வாகிகள் ரஞ்சித் குமார், நாகமணி,விக்னேஷ், அம்பேத் குமார்,சூர்யா, சாந்தகுமார் பேரூர் மகளிர் அணி வார்டு செயலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் விசால் கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.