• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தேனி நகர 9 வது வார்டு மற்றும் 12 வது வார்டுகளுக்கு விருப்ப மனு

Byகாயத்ரி

Nov 29, 2021

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடைபெற உள்ள நிலையில் விருவிருப்பாக வேட்புமனு தாக்கல் நடைப்பெற்றது.

தேனி நகர 9 வது வார்டு மற்றும் 12 வது வார்டு திமுக சார்பில் போட்டியிட விருப்ப வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.தேனி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் K.S.சரவணக்குமார் முன்னிலையில் தேனி நகர கழக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் முன்னிலையில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கப்பட்டது.

தேனி நகர 9 வது வார்டுக்கு தேனி நகர துணை அமைப்பாளர் ஆதி திராவிட நலக்குழு, திமுக சார்பில் M.P.கெளதம் பாண்டியன் மற்றும் நகர தேனி நகர 13 வது வார்டுக்கு மகளிரணி துணை அமைப்பாளர் P. பாண்டியம்மாள் ஆகிய இருவரும் திமுக சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளனர்.