மணிப்பூர் அனைத்துப் பணிபுரியும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் ‘வாங்கைம்சா ஷாம்ஜா’ கடந்த இரண்டு நாட்களாக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) வரவழைத்து துன்புறுத்தியதை இந்தியன் ஜெர்னலிஸ்ட் யூனியன் IJU மற்றும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன் (TAMJU) கண்டிக்கிறது.
AMWJU நடத்திய போராட்டத்தில்; IJU தலைவர் கீதார்த்த பதக் கலந்து கொண்டார் . எடிட்டர்ஸ் கில்ட் மணிப்பூர் (EGM) மற்றும் இம்பாலில் உள்ள மணிப்பூர் ஹில் ஜெர்னலிஸ்ட் யூனியன் (MHIU) வும் இணைந்து, பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான இத்தகைய தன்னிச்சையான நடவடிக்கைகளை NIA கைவிடவேண்டும் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்று கோரியது.
“கங்களிப்பாக்கி மேரா“ எனும் மாலை நாளிதழின் தலைமை ஆசிரியர் வாங்கெம்சா ஷாம்ஜாய், ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு என்.ஐ.ஏ அதிகாரிகளால் வரவழைக்கப்பட்டார்.
ஒத்துழைக்கும் மனதுடன் , ஷாம்ஜாய் சரியான நேரத்திற்கு சென்ற போதும், அவருக்கு முற்றிலும் வித்தியாசமாக , ஒரு அதிகாரி மதியம் அவரை விசாரிக்கத் தொடங்கும் வரை யாருடனும் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு சிறிய அனறயில் விடப்பட்டு பின் அவர் சங்கடமான கேள்விகளால் விசாரணை என்கிற பெயரால் மாலை 5 மணி வரை நீடித்து மிக தாழ்வுடன் நடத்தப்பட்டார்.
திரு. ஷாம்ஜாய் கூற்றுப்படி, அடுத்த நாளும் NIA அதிகாரிகளால் அவர் மிரட்டப்பட்டுள்ளார்.
NIAயின் இத்தனைய தன்னிச்சையான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து மணிப்பூர் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஊடக அமைப்புகள் IJU, AMWJU, EGM மற்றும் MHJU அவசரக் கூட்டத்தைக் கூட்டி, போராட்டம் நடத்தி ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஊடகவியலாளர்கள் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைக்கும் வரை அவர்கள் துன்புறுத்தப்படக் கூடாது என்று போராட்டம் முன் வைக்கப்பட்டது.
ஊடவியளர்களின் பாதுகாப்பை முன் நிறுத்தி நடந்த இந்த ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜெர்னலிஸ்ட் யூனியன் தனது முழு ஆதரவை அளித்துள்ளது.