• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

அரசு விழாவாக வ.உ.சி.யின் பிறந்தநாளை அறிவித்த முதல்வர் : நன்றி தெரிவித்த தேனி மக்கள்

By

Sep 5, 2021

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள சக்கம்பட்டியில் வ .உ. சி இளைஞர் மன்றம் சார்பாக, வ.உ.சியின் 150வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழா ஆண்டிபட்டி டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர் சேது ராஜா மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். வ.உ.சிதம்பரனார் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், கேக் வெட்டி கொண்டாடினர்.

செக்கிழுத்த செம்மல், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி-யை கவுரவிக்கும் வகையில், தமிழக முதல்வர் அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட அறிவித்ததற்கு வ.உ.சி இளைஞர் மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.