சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் புஷ்பராணி.13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டே ஆண்டுகளில் கணவர் இறந்து விட்டதால் மணமுடைந்து மறுமணம் செய்யாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் ,மதகுபட்டியில் உள்ள தனியார் கிளினிக்கில் பணி புரிபவர் கருப்பசாமி என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.திருமணம் முடித்த சில மாதங்களில் கருப்பசாமி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தந்தை அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு விரட்ட முயற்சித்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த புஷ்பராணி காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் கருப்புசாமியை கைது செய்யுமாறு புகார் மனு அளித்தார் . இதனடிப்படையில் ,அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கருப்பசாமியை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.