• Thu. Mar 28th, 2024

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு… சென்னை மாவட்ட ஆட்சியரின் அன்பு வேண்டுகோள்..!

Byவிஷா

Nov 27, 2021

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது..,


பாலியல் வென்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்வது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும் என தெரிவித்துள்ளார். மேலும் பாலியல் வன்முறையை செய்யக்கூடிய நபரே தவறிழைத்தவர், குற்றவாளி, தண்டிக்கப்படகூடியவர். எனவே பாதிக்கப்படும் குழந்தைகள் எந்தவிதத்திலும் தங்களுக்கு குற்றவுணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். உங்கள் மீதோ அல்லது உங்கள் தோழிகள் மீதோ பாலியல் வன்முறை நிகழ்வதை அறிந்தால், நீங்கள் அச்சப்படவோ அல்லது உங்களை தனிமைப்படுத்திக்கொண்டு தற்கொலை செய்யும் தவறான முடிவை தேடிக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


நீங்கள் பாதுக்காக்கபட வேண்டியவர்கள் என்று கூறும் அவர், உங்களுக்குத் தேவையானது சரியான ஆலோசனை மற்றும் முதலுதவி மட்டுமே என்பதை நீங்கள் உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் ஒரு வேளை உங்கள் மீது பாலியல் வன்முறை நடந்தால், நீங்கள் உங்கள் தாயிடமோ அல்லது உங்கள் நம்பிக்கையானவரிடமோ தெரியப்படுத்தி, அவரது உதவியை நாட வேண்டும். அவர்கள் உங்கள் ரகசியத்தை பாதுக்காத்து, காப்பவராக இருக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் மாவட்ட ஆட்சிதலைவர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியையோ நாட விரும்பினால், தயக்கமின்றி எங்களை நீங்கள் தொடர்புகொள்ளலாம். இதற்கென உங்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அவசர தொடர்பு எண் 1098 ஐ அழைத்து, தகவல் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அலோசனையும், பாதுக்காப்பும் வழங்க நாங்கள் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


நீங்கள் எங்களோடு பேச விரும்பினால், 9940631098 என்ற எண்ணின் வாட்ஸ் அப் மூலம் எங்களுக்கு குறுசெய்தி அனுப்பினால் போதும், நாங்களே உங்களை தொடர்புக்கொண்டு உங்கள் தேவை அறிந்து உதவி செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சென்னை மாவட்டத்தில் உதவி செய்ய நானும், குழந்தை நலன் மற்றும் பாதுக்காப்பு சார்ந்த அலுவலர்களும் தாயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ள ஆட்சியர், சென்னை மாவட்டத்தை குழந்தைகளுக்கு பாதுகாப்பு நிறைந்த மாவட்டமாக உறுதி செய்திடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *