• Thu. Apr 18th, 2024

குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாக சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் மூழ்கியது பல்லாயிரக்கணக்கான நெல் வயல்கள், வாழை, தென்னை தோப்புகளில் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாய விளைநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அரசு தரப்பில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக சேத மதிப்பீடு கணக்கு எடுக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் தரப்பில் மாவட்டம் முழுவதும் வெறும் 1200 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே நெல் வாழை தென்னை விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் கிராமங்களில் உள்ள பாதிப்புகளை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. மாவட்டம் முழுவதும் இதன் மதிப்பு ரூ 3000 ஹெக்டேர் பரப்பளவில் பாதிப்பு உள்ளது என்று விவசாய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் ஆற்று கரை கால்வாய்களில் குளங்களில் உடைப்பு 450க்கு மேல் உள்ளன. தேரூர் போன்ற பல இடங்களில் நெல் பயிர் மழை காட்டாற்று வெள்ளத்தில் அடித்து கொண்டு வரப்பட்ட மண் மூடி உள்ளது. இதனால் அந்த நிலத்தை பக்குவப்படுத்த லட்சக்கணக்கில் பணம் தேவைப்படும். அரசு தரப்பில் அறிவித்தது ஹெக்டேருக்கு 7 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் தரப்பில் ஏற்க முடியாது. 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த கூட்டத்தில் வைக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களுக்கு கணக்கிடப்பட்டுள்ளன இழப்பீடு தொகை இதுவரை விவசாயிகளுக்கு அரசு தரப்பில் தரவில்லை என்ற வேதனையும் இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *