திமுக – விசிக பேச்சுவார்த்தை தொடங்கியது..!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார். தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் நியமனம்..
நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக ஆனந்த் நாகேஸ்வரன் என்பவரை நியமனம் செய்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. 2022-2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் 1-ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், ஆனந்த் நாகேஸ்வரனின் நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாக…
திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறதா தமிழ்நாடு காவல்துறை
இந்துமத கோவில்கள் இடிக்கப்படுவது குறித்து, எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக பேசுவதாகவும் மதக்கலவரத்தை தூண்டுவதாகவும் வழக்கு பதியப்படும் என்று ஆளும் கட்சி மிரட்டுகிறது, அதற்கு தமிழக காவல்துறையும் துணை போகிறது. நடவடிக்கை எடுத்தால் வினோஜ்.பி.செல்வத்திற்கு பாஜக துணைநிற்கும்.எதைப் பேசினாலும் அது மதச்சார்பாக…
உள்ளாட்சி தேர்தலில்பாஜக யாருடன் கூட்டணி அண்ணாமலை அறிவிப்பு?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முடிவெடுப்பார் என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று…
அதிமுகவை பங்கம் செய்யும் பாஜக பதுங்கும் எடப்பாடி – பன்னீர்செல்வம் வகையறா
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலாவின் வருகையால் அதிமுகவில் உட்கட்சி குழப்பம் ஏற்பட்டது. இதை தனக்கு சாதகமாக்கி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க இறங்கிய பாஜக திடீரென யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. மத்தியில் பாஜக ஆட்சியில்…
திமுக காரர் திருமணத்தில் பங்கேற்றதால் அதிமுகவில் இருந்து நீக்கம்?
அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். திமுகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளருமான இளங்கோவனின் மகள் திருமணம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு…
தங்கக்கட்டி விற்பனையில் மோசடி செய்த மூவர் கைது!
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் தங்கக்கட்டி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் முதலிப்பாளையம் சேர்ந்த நெசிலா. இவரது கணவர் ஷேக் அலாவுதீன், அப்பகுதியில் ரியல் எஸ்டேட் மற்றும் லேத் வொர்க் ஷாப் தொழில்…
தேனி: அரசு பள்ளியில் படித்த ஓட்டல் தொழிலாளி மகளுக்கு ‘டாக்டர் சீட்’
ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனி ‘நீட்’ தேர்வில் தேர்வாகி, மதுரை தனியார் மருத்துவக் கல்லூரியி|ல் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (50). இவர் விவசாயம் பார்த்துக்கொண்டு, ஓட்டல்…
வேலூரில் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் அவதி!
வேலூர் மாவட்டம், மாநகராட்சி இரண்டாம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியான பழைய பேருந்து நிலையத்தில் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு அதிக கடைகள் இயங்கி வருவதால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அதிக விபத்துகள் உண்டாகும் நிலையும் உள்ளது! இதற்கு காரணமாக, வைக்க…
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் வெளியீடு!
குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட ஒரு சில தேர்வுகளுக்கான மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் டிஎன்பிஎஸ் சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழக அரசுப்பணியில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) மூலம் தேர்வுகள் நடத்தி…