• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றும் விவகாரம்..,

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

மதுரை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் இன்று மாலை முதல் திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாக்காக ஐயாரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் தீபம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் மட்டும் ஒரு எஸ் பி தலைமையில் இரண்டு உதவி ஆணையாளர், நான்கு காவல் ஆய்வாளர்கள் என சுமார் 187 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்

தர்கா அமைந்துள்ள பகுதியில் மட்டும் ஒரு எஸ் பி தலைமையில் ஒரு ஏ டி எஸ் பி நான்கு டிஎஸ்பி ஐந்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 190 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்: நெல்லிதோப்பு பகுதியில் 282 காவலர்கள்.

காசி விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ள பகுதியில் மட்டும் ஒரு எஸ் பி தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி ரெண்டு டிஎஸ்பி ஐந்து காவல் ஆய்வாளர்கள் முன்னிலையில் 318 காவலர்கள் பணியமத்தப்படுவார்கள்*

காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டு பகுதியில் 453 காவல் துறையினர் -மலைக்கு செல்லும் ஒன்பது மலை பாதைகளில் 163 காவல்துறையினர் நியமிக்கப்படுகிறார்கள்

கிரிவலப் பாதையில் 125 காவல்துறையினர் -திருப்பரங்குன்றம் கோவிலில் மட்டும் 110 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூண் தர்கா காசி விஸ்வநாதர் கோவில் நெல்லித்தோப்பு உச்சி பிள்ளையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 1163 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தற்போது வரை தமிழக அரசு மாவட்ட நிர்வாகமும் எந்தவித முடிவும் எடுக்காத நிலையில் காவல்துறை சார்பில் 5000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் ஒரு பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது