உசிலம்பட்டியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழ்நாடு மாநில செயலாளர் எஸ்.ஓ.ஆர் இளங்கோவன் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமை ஆற்றினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வரும் சூழலில், தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் 322 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது இதில் 100-க்கும் மேற்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பலத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தேனி நாடாளுமன்ற தொகுதி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மெய்யணம்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தமிழ் நாடு மாநில செயலாளர் எஸ்.ஓ.ஆர். இளங்கோவன் தனது வாக்கினை பதிவு செய்தார்.,