• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

மின்வாரிய மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய உரிமைக்கான போராட்டம்..,

ByAjmalkhan saleemraja

Nov 23, 2026

தேனி மாவட்டத்தில் கேங்மேன் பணியாளர்களை உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய உரிமைக்கான போராட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, தேனி மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய கேங்மேன் பணியாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 14.03.2026 அன்று வழங்கப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படியும், கடந்த 02.11.2026 அன்று மின்துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் அடிப்படையிலும், கேங்மேன் பணியாளர்களை உதவியாளர்களாக பதவி மாற்றம் செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், கேங்மேன் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு மற்றும் மின்வாரிய நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய மத்திய அமைப்பின் தேனி கிளையைச் சேர்ந்த கேங்மேன் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.