ஜனவரி 10ல் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்
வருகிற ஜனவரி 10ஆம் தேதியன்று, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் சர்வதேச பலூன் திருவிழா தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசின் சுற்றுலாத் துறை, தனியார் அமைப்புடன் இணைந்து ஆண்டுதோறும் சர்வதேச பலூன் திருவிழாவை விமரிசையாக நடத்தி வருகிறது.…
தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதற்கு எதிர்ப்பு… உரையை வாசிக்காமல் வெளியேறிய ஆளுநர்!
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டின் முதலாவது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடரின் போது ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆளுநர்…
தமிழக வாக்காளர் இறுதிப் பட்டியல்… இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜனவரி 6) வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது. 2024 ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர்…
உலகப் புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு… ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்!
உலகப்புகழ்பெற்ற மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள உள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6) முதல் தொடங்க உள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரத்தில்…
பரபரப்பான சூழ்நிலையில் இன்று கூடுகிறது தமிழக சட்டசபை!
தமிழ்நாடு சட்டசபை முதல் கூட்டம் இன்று(ஜனவரி 6) தொடங்குகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த உள்ளார்.. ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது மரபாக உள்ளது. அந்த வகையில், இன்று கூடும் சட்டசபையின் முதல்…
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை
அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் மத்திய மாநில அரசுகளிடம் கோரிக்கை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு காளைகளை கொண்டு செல்லும்போது வசூலிக்கப்படும். டோல்கேட் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும். தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதி…
கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் கடும் நடவடிக்கை
தமிழக அரசின் பொங்கல் தொகுப்புகளுக்கான கரும்பு கொள்முதலில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் அணுகினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான கரும்புகளை கொள்முதல் செய்ய சென்னை தவிர்த்த பிற…
24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக அனுமதிப்பு
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், தேவைக்கேற்ப கூடுதலாக 24 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை அனுமதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசில் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளிலும் பல இடங்களில் காலி பணியிடங்கள் உள்ளதால் மாணவர்களும் சிரமத்திற்கு…
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி… முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த: 6 பேர் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் பகுதியில் உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டது. அந்த…
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம்… ஞானசேகரின் கூட்டாளிக்கு வலை
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஞானசேகரனின் கூட்டாளியான குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்தவரை பிடிக்க சிறப்பு புலனாய்வுக்குழு முடிவு செய்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை…




