தேனி: ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் அ.ம.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல்..!
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்டம் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 11வார்டுகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்…
தேனி: சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா
தேனி மாவட்டம், போடி தாலுகா சிலமலையில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் திருமண மண்டபத்தில் இன்று (பிப்., 1) காலை 11 மணியளவில், தேனி மாவட்ட சிவசேனா கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா நடந்தது. இவ்விழாவில் 50க்கும் மேற்பட்ட நபர்கள்…
தேனி: வீரபாண்டியில் தொழுநோயாளிகளுக்கு
மருத்துவ மறுவாழ்வு முகாம்
தேனி மாவட்டம், தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் ஊனத் தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு முகாம், தேனி அருகே வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்தது. வீரபாண்டியில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு, துணை இயக்குனர் (தொழுநோய் பிரிவு) டாக்டர், ரூபன்…
ஆண்டிபட்டியில் குப்பைக்கு நடுவில் இயங்கும் கிராம நிர்வாக அலுவலகங்கள்
இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்ற சந்தேகத்தில் மோசமான கட்டிடத்தில் ஆண்டிபட்டியில் குப்பை கிடங்கில் இரண்டு கிராம நிர்வாக அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வேலப்பர் கோவில் சாலையில் ஆண்டிபட்டி பிட் 1 மற்றும் பிட் 2 ,உள்ளிட்ட…
தேனி: மாவட்ட கால்பந்து
கழக லீக் சாம்பியன்ஷிப்
போட்டிகள்
தேனி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட லீக் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம் மொட்டனூத்து ஊராட்சிக்குட்பட்ட ஆசாரிபட்டி கிராமத்தில் உள்ள மைதானத்தில் போட்டிகள் துவங்கியது. இப்போட்டியில் தேனி, போடி, சின்னமனூர், வெங்கடாச்சலபுரம், ஆதிப் பட்டி ஆகிய…
ஆக்கிரமிப்பின் பிடியில் பழைய பஸ் ஸ்டாண்ட்: உயிர் பயத்தில் பயணிகள்
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்பால், வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பயணிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். அடிக்கடி ஏற்படும் வாகன நெரிசலால் பெரும் விபத்து ஏற்படும் முன், இங்கு ஆக்கிரமிப்பை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க…
பெரியகுளத்தில் இலவச சிலம்பம் பயிற்சி அளிக்கும் ஆசிரியருக்கு பாராட்டு..!
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் கற்கும் பயிற்சியை இலவசமாக அளித்து வரும் ஆசிரியருக்கு கீழவடகரை ஊராட்சி மன்றம் சார்பில் நற்சான்றிதழ் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் கீழவடகரை ஊராட்சி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட…
ஆண்டிபட்டி அருகே ரூபாய் 4 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் 3 பேர் கைது.
ஆண்டிபட்டி அருகே மதுப்பான கடையில் கள்ளநோட்டை மாற்ற முயற்சித்தபோது 3 லட்சத்து 90ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு நகர்பகுதியிலுள்ள மதுகடையில் நந்தனார்புரம் பகுதியை சேர்ந்த தவம் என்பவர் 500…
தேனி: அரசு பள்ளியில் படித்த ஓட்டல் தொழிலாளி மகளுக்கு ‘டாக்டர் சீட்’
ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரம் அரசு பள்ளி மாணவி சிவரஞ்சனி ‘நீட்’ தேர்வில் தேர்வாகி, மதுரை தனியார் மருத்துவக் கல்லூரியி|ல் இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (50). இவர் விவசாயம் பார்த்துக்கொண்டு, ஓட்டல்…
தேனி: மாநில செஸ் போட்டி: வென்றவர்களுக்கு பரிசளிப்பு
தேனியில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி மற்றும் வைகை அரிமா சங்கம் இணைந்து 73 வது குடியரசு தின விழா கோப்பைகளுக்கான மாநில அளவிலான முதல் செஸ் போட்டியை நடத்தியது. தேனி அன்னப்பராஜா மண்டபத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 8, 10, 12,…




