சிலப்பதிகாரக் கற்புக்கரசி கண்ணகி வழிபட்ட ஆண்டிபட்டி மேற்குத்தொ|டர்ச்சி மலையடிவார ஏத்தக்கோவில் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா .
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவார கிராமம் ஏத்தக்கோவில் . இக்கிராமத்தில் நடுநாயகமாக அமைந்துள்ள ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்றது . 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என்ற ஆகம விதிப்படி கடந்த கடந்த 2009 ஆம் ஆண்டு கோவில்கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் தற்போது விழா நடைபெற்றது . கோவில் மூலவரான முத்தாலம்மனுக்கும் துணைபரிவார தெய்வங்களான செல்வவிநாயகர் , மாரியம்மன் , காளியம்மனுக்கும் 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து சேகரித்து கொண்டுவரப்பட்ட புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது . கற்புக்கரசி கண்ணகி தனது கணவன் கோவலன் மதுரையில் பாண்டிய நெடுஞ்செழியனின் தவறான தீர்ப்பு தண்டனையால் கொலையுண்டு இறந்ததை அடுத்து மதுரையை தனது கற்பின் வலிமையால் தீக்கிரையாக்கிவிட்டு தற்போது கேரளா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள கண்ணகி கோட்டத்திலிருந்து புஷ்பகவிமானம் மூலம் வானுலகம் சென்றதாகவும் , மதுரையிலிருந்து ஆண்டிபட்டி மேற்கு தொடர்ச்சி மலை வழியாக செல்லும் வழியில் ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் முத்தாலம்மன் மற்றும் சப்த கன்னிமார்கள் வழிபட்டு சென்றதாகவும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சிறப்புடையது இக்கோவில் . இவ்விழாவில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கலந்து கொண்டனர் .

