மாமன்னன் ராஜராஜ சோழனின் 1036-வது சதய விழா
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய, மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரமான இன்று, அவரின் 1036-வது சதய விழா இன்று காலை 6 மணிக்கு பெரிய கோவிலில் மங்கள இசையுடன் தொடங்கியது. இதையடுத்துக் கோயில் பணியாளர்களுக்குப்…
மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை ஆய்வு செய்த அமைச்சர் குழு
மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் எருக்கட்டாஞ்சேரி என்ற இடத்தில் நீரில்…
வீடு இடிந்து விழுந்து 5 வயது குழந்தை உயரிழிப்பு!
சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று நண்பகலில் பெய்யத் தொடங்கிய மழை இரவு வரை நீடித்ததால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட…
ஆண்டிப்பட்டி 58கிராம திட்டக் கால்வாயில் இருந்து தண்ணீர் திறப்பு..!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து 58 கிராம திட்டக் கால்வாயில் இருந்து 150 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆணையின்படி, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, நிதி…
மீண்டும் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழையால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாத நிலையில், மீன்வளத் துறை அனுமதி அளித்ததை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி…
குமரி தொட்டிப் பாலத்தில் நிரம்பி வழியும் வெள்ள நீர்
தமிழகத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு ஏரிகள், குளங்கள் வேகமாக நிறைந்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் அருகே உள்ள தொட்டிப் பாலம் வெள்ள நீர் நிரம்பி வழியும் காட்சி வெளியாகி உள்ளது.
CPI பிரமுகர் வெட்டிக்கொன்ற வழக்கில் 5 பேர் கைது – பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி!
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கடைவீதி பகுதிக்குச் சென்றபோது, 8 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படு…
பழையாற்றில் வெள்ளம்
கன்னியாகுமரி மாவட்டம் பழையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பிரதான சாலையான ஒழுகிணசேரி சாலையில் மழை வெள்ளம் புகுந்து முற்றிலுமாக சாலையை ஆக்கிரமித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது, மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள் என ஏராளமான வாகனங்கள் மழை நீரில் சிக்கின. கன்னியாகுமரி…
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தங்கையை காப்பாற்றிய அக்கா
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி துரிதமாக காப்பாற்றி உள்ளார். அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. இந்த கிணற்றுக்குள் தனது தங்கை விழுந்ததைக்…
திருவாடானையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 90% கண்மாய்கள் நிரம்பி விட்டன. அதனால் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.…








