மயிலாடுதுறையில் கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் எருக்கட்டாஞ்சேரி என்ற இடத்தில் நீரில் மூழ்கிய சம்பா பயிர்களை ஆய்வு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.பெரியசாமி..,
கடந்த 10ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசு நீர் நிலைகளை தூர்வாரியதாக விளம்பரம் தேடிக்கொண்டதே தற்போதைய மழை பாதிப்புக்கு காரணம் எனக் குற்றம் சாட்டினார். மழையால் பாதித்த பயிர்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.