தமிழ்நாட்டில் தவெக தலைமையில் 17வது சட்டப்பேரவை முதல் பட்ஜெட் கூட்டம் மற்றும் மானிய கோரிக்கைக்கான கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது.
பொது நிதிநிலை அறிக்கையும், 6ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று முடிந்து, தொடர்ந்து துறைகள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து விவாதங்கள் அமைச்சர்கள் பதிலுரைகள் நடைபெற்றன. நேற்று 8ம் தேதி பேரவை மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்திருக்கிறார்கள்.
இதில் என்ன நாம் பார்க்க வேண்டியது இருக்கிறது? நடைபெற்று முடிந்த பேரவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. , விவாதத்தில் பெரும்பாலான நேரங்கள் ஆளுங்கட்சியினரும், அமைச்சர்களும் பழைய சம்பவங்களை தொடர்பில்லாத சம்பவங்களை கூறி எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதிலேயே அக்கறை காட்டினார்கள் என்பதை நாம் பார்க்க முடிந்தது. அதற்காகவே ஆளுங்கட்சியினர் அதிக நேரம் எடுத்துக்கொண்டார்கள் என்பதையும் நாம் நேரலையில் பார்க்க முடிந்தது.
முக்கியமான மக்கள் பிரச்சனைகளை, சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம், லாக்கப் மரணங்கள், கடன் சுமைகள், வளர்ச்சி திட்டங்கள், தேர்தல் வாக்குறுதிகள் இவைகளை பற்றி எதிர்க்கட்சி தலைவர்களும், எடப்பாடியார் அவர்களும் எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் அவையிலே எழுப்பிய கேள்விகளுக்கு, விவாதித்து தீர்வு காண முழுமையான அக்கறையை தவெக அரசு செலுத்தி இருக்க வேண்டும்; ஆனால் அதில் தவெகஅரசு தவறிவிட்டது என்பதுதான் இந்த நேரலை காட்சிகள் நமக்கு சாட்சியாக இருக்கிறது.

இதில் தவெகவும், திமுகவும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறி சட்டப்பேரவையின் பொன்னான நேரத்தை வீணடித்தது, என எடப்பாடியார் சுட்டிக்காட்டினார்.
ஆகவேகவலையோடு இன்றைக்கு தமிழ்நாட்டு மக்கள் பார்ப்பது என்னவென்றால், அவையின் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளிப்பதில்லை. மூன்று அமைச்சர்களான ஆதவ், அர்ஜுனா நிர்மல் குமார் ராஜமோகன் ஆகியோர் தான் சட்டப்பேரவையில் அறிவிக்கப்படாத முதலமைச்சராக, சட்டசபையின் உறுப்பினர்கள் எந்த துறைக்கு கேள்வி கேட்டாலும், இவர்கள்தான் முந்திரி கொட்டையாக முந்திக்கொண்டு, துறைக்கு சம்பந்தமில்லாத அதேபோன்று வீண் விவாதங்களை வளர்த்து டேக் டைவர்ஷன் என்று சொல்லக்கூடிய சட்டப்பேரவையை டைவர்ஷன் நிலையிலே அவர்கள் வம்பிழுத்து வழக்காடு மன்றமாக அதை மாற்றினார்கள் என்பதையும் நேரலை நமக்கு சாட்சியாக இருந்தது.
தமிழ்நாடு சட்டப்பேரவை 16 தொடர்களை காணாதது வகையில் முதல்வரின் துறைக்கே இந்த மூன்று அமைச்சர்கள் முந்திரி கொட்டையாக பதில் சொல்வதை இதுவரை தமிழகத்திலே அரசியல் வரலாற்றிலே சட்டமன்ற வரலாற்றிலே நூற்றாண்டு காலத்திலே சட்டமன்ற வரலாற்றிலே நாம் பார்த்ததில்லை.
முதல்வர் தான் அனைத்து அமைச்சர்களுடைய கேள்விகளுக்கும், முதல்வர் பதில் அளிப்பதற்குத்தான் அவருக்கு தார்மீக உரிமை உண்டு. அவர்தான் 8 கோடி தமிழர்களுக்கும் வழிகாட்ட வேண்டியவர். அனைத்து அமைச்சர்களின் கூட்டு பொறுப்பு முதலமைச்சருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
ஆகவே இதுவரை நாம் பார்த்ததெல்லாம் புரட்சித் தலைவர், புரட்சிதலைவி அம்மா, எடப்பாடியார் அதேபோல திமுகவின் முதல்வர்கள், அதேபோல காங்கிரஸ் கட்சின் முதல்வர்கள்,இதுவரை ஆண்ட முதல்வர்கள் எல்லாம் அமைச்சர்கள் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் தடுமாறுகிற போது, முதலமைச்சர் முன்வந்து அந்த துறை சார்ந்திருக்கிற விவரங்களை புள்ளி விவரங்களை எடுத்து வைத்து ஆதாரத்தோடு பதில் உரைத்து, அந்த கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் அவர்கள் தீர்வு காணுகின்ற வகையிலே பதிலுரை அமைந்திருக்கிறது.
ஆனால் இங்கே தவெக அரசில் முதல்வரிடத்திலே கேட்கிற கேள்விக்கே மூன்று அமைச்சர்கள் முந்திரி கொட்டை அமைச்சர்களாக பதில் சொல்வதை இதுவரை நாம் பார்த்ததில்லை. இது புதிய அணுகுமுறையாக நாம் பார்க்கிறோம். இது முதல்வருடைய இயலாமையா, அல்லது மூன்று அமைச்சர்களுடைய திறமையா என்பதை நாம் மக்களினுடைய தீர்ப்புக்கே விட்டுவிடலாம்.
ஆகவே இன்றைக்கு முதல்வர மௌனம் காத்து அதை அவர் கவனித்து வருகிறார் என்று பேரவைத் தலைவர் அவர்கள் முதல்வருக்கு ஜால்ரா அடிக்கிறார். அது அவருடைய கடமை. ஏனென்றால் அவருக்கு மிக உயர்ந்த அந்தஸ்து கொடுத்திருக்கிறார். அதற்காக அவர் அந்த கடமையை அவர் செய்துதான் ஆகவேண்டும்.
ஆனால் எதிர்க்கட்சியின் மீது பழி போடுவது மட்டும்தான் தவெகவின் பொலிட்டிகல் கடமையாக இல்லாமல், பேரவையின் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டு மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளைப் பற்றி அதிகம் பேச நூற்றாண்டு காணுகின்ற சட்டப்பேரவையின் மரபுகளையும் மாண்புகளை காக்க வேண்டும் என்பதே மக்களுடைய நம்பிக்கையாக இருக்கிறது.

ஆகவே இன்றைக்கு 16 சட்டமன்ற கூட்டத்தொடர்களில் நாம் எங்கும் காணாத வகையிலே ஒரு மல்யுத்த மன்றமாக மாறி பேரவையின் மாண்பை மறந்து தவெக அரசு பேரவையின் மாண்பை காற்றிலே பறக்க விட்டிருக்கிறது. அதுதான் 17வது சட்டப்பேரவையினுடைய சாதனையாக பார்க்கப்படுகிறது.
8 கோடி மக்களுக்கு வழிகாட்ட வேண்டிய முதல்வர் தனது துறையிலே காவல்துறை தீயணைப்பு துறையின் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் அவையிலே எழுப்பிய துறை சார்ந்த கேள்விக்கு ஒன்றுக்கு கூட அவர் பதில் அளிக்காமல் மௌனம் காத்ததோடு, முதல்வரின் துறை சார்ந்த பதிலுரையில் அவருடைய உடல் மொழியும், தமிழ் மொழியும் செயற்கையான கோபத்தை, பார்க்க முடிந்தது. அது இயற்கையான, இயல்பானதாக தெரியவில்லை.
அதேபோல, இந்த முதல்வரின் இயல்பான பேச்சை நாம் காண முடியவில்லை. எதற்கு இந்த செயற்கைத்தனமான அந்த உடல் மொழியை முதல்வர் அவர்கள் அவையிலே பதிவு செய்தார்கள் என்று நமக்கு தெரியவில்லை.

ஆகவே இந்த கூட்டத்தொடர் முழுவதுமே முதல்வரின் இயல்பான பேச்சை காண முடியாத ஒரு பெருத்த ஏமாற்றத்தை தான் மக்கள் பார்க்க முடிந்தது ஆகவே மொத்தத்திலே விடுமுறை நாட்கள் நீங்களாக 28 நாட்கள் நடந்து முடிந்த சட்டப்பேரவையில், முதல்வர் விஜய் இன்னும் திரைப்பட தாக்கத்தில் இருந்து அவர் வெளியே வரவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது.
ஆகவே செயற்கைத்தனமான ஒரு உடல் மொழியை அவர் வெளியே காட்டி இருப்பது உண்மையையும், நேர்மையும், நாணயத்தையும் ,சத்தியத்தையும், எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.
எது எப்படியோ, இதையெல்லாம் நேரலையிலே பார்த்து இன்றைக்கு மக்கள் என்ன தீர்ப்பளிப்பார்கள் என்பதை வருகின்ற இடைத்தேர்தல் நமக்கு நல்ல தீர்ப்பை எடப்பாடியாரின் தலைமையில் மக்கள் வழங்க இருக்கிறார்கள்.
கடந்த நான்கு மாதங்களிலே மட்டும் தமிழக அரசு 34,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இதிலே 31,000 கோடி ரூபாய் வருவாய் செலவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதுதான் 17வது சட்டப்பேரவையின் தவெக அரசினுடைய சாதனையாக பார்க்கப்படுகிறது.
முக்கிய பிரச்சனையான சட்ட ஒழுங்கு பிரச்சனை, அதேபோல இன்றைக்கு விலைவாசி உயர்வு,லாக்கப் மரணங்கள்,போதை பொருள் நடமாட்டம், இவையெல்லாம் முக்கிய பிரச்சனைகளாக இருக்கிறது. ஊழல், ஊழல் ஒழிந்துவிட்டது என்று விசில் ஊதுகிறார்கள். ஆனால் தினந்தோறும் ஊழலுக்கான கைது நடவடிக்கை நாம் பார்க்க முடிகிறது.
ஊழல் இருப்பதினால் தான் கைது நடவடிக்கை தொடர்கிறது. ஆகவே ஊழல் ஒழிந்துவிட்டது, கிளீன் இமேஜ் என ஒரு பிம்பத்தை கட்டமைப்பதற்காக தவெக அரசு முயற்சிப்பதைத் தவிர வேறு எந்த நல்ல காரியத்தையும் இந்த மக்களுக்கு செய்த மாதிரி நமக்கு தெரியவில்லை.
இடைத்தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பை, மக்களுக்கான தீர்ப்பை, மக்களுடைய எதிர்காலத்திற்கான தீர்ப்பை எடப்பாடியார் இன்றைக்கு எடுத்திருக்கிற அந்த முயற்சிக்கு நல்ல ஆதரவு தருவதற்கு அவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என கூறினார்.








