• Mon. May 29th, 2023

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தங்கையை காப்பாற்றிய அக்கா

Byமதி

Nov 12, 2021

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி துரிதமாக காப்பாற்றி உள்ளார். அந்த சிறுமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. இந்த கிணற்றுக்குள் தனது தங்கை விழுந்ததைக் கண்ட 14 வயது தேவிஸ்ரீ என்ற சிறுமி உடனடியாக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றி உள்ளார்.

கிணற்றில் விழுந்த சிறுமியின் தலை முடியை பிடித்துக்கொண்டு, தேவிஸ்ரீ சத்தமிட உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டுள்ளனர். இதன் பின்னர் அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றை மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர். தனது தங்கையை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்பதை அறிந்ததும் உடனடியாக சமயோசிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவிஸ்ரீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *