• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மின் வயர்கள் மீது செல்லும் மரக் கிளைகளை அப்புறப்படுத்த கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Sep 9, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் உள்ள சனீஸ்வரன் கோவில் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது மரக்கிளைகள் செல்கிறது.

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் அருகில் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் ஆகியோருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மின்வயர்கள் மீது ஆபத்தாக செல்லும் மரக்கிளைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சனீஸ்வரன் கோவில் அருகில் இந்த பகுதி வேன் ஓட்டுநர்கள் தங்களது ஸ்டாண்ட் அமைத்துள்ளதால் ஸ்டாண்ட் அருகே மர கிளைகள் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் மீது படர்ந்து செல்கிறது.

இதனால் ஸ்டான்டில் எப்போதும் 10க்கும் மேற்பட்ட டிரைவர்கள் பணியாளர்கள் அமர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதாக கூறுகின்றனர். இதே போன்று சோழவந்தான் தெற்கு தெரு பகுதிகளிலும் மின் வயர்கள் மீது ஆபத்தான நிலையில் மரக்கிளைகள் செல்வதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்று மின்வயிர்கள் மீது செல்லும் மர கிளைகளை அப்புறப்படுத்த மின்சார வாரியத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்