ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே 90% கண்மாய்கள் நிரம்பி விட்டன. அதனால் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்த நிலையில் இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமா வாத் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று சாலையோர பகுதிகளை பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரத்தில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக வந்து பார்வையிட்டு சென்றார். கிழக்கு கடற்கரை சாலையில் வந்த மாவட்ட ஆட்சியர் நம்புதாளை, பி.வி.பட்டினம், எஸ்பி பட்டினம், உள்ளிட்ட கடற்கரை கிராமங்களை பார்வையிட்டு அதன்பிறகு மங்கலக்குடி, ஊரணி கோட்டை, மாணிக்ககோட்டை தரைப்பலத்தை பார்வையிட்டார்.
பின் கோடனூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, அதன்பிறகு திருவாடானையில் தெற்கு மாட வீதியில் உள்ள மழையால் இடிந்த கோவிவீட்டினை நேரில் பார்வையிட்டு நிவாரணம் வழங்கினார்.
அதன் பிறகு திருவாரூரில் இருந்து சோதனைக்கு செல்லும் தரைப்பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் செல்வது கொண்டிருப்பதை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த இடத்தில் விரைவில் மேம்பாலம் அமைக்க கோரினார். இந்நிகழ்வில் திருவாடனை தாசில்தார் செந்தில் வேல் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகப்பெருமாள் பாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் இலக்கியா, ராமு, கஸ்தூரி, சுப்பிரமணியன், துணை தலைவர்கள் மகாலிங்கம், சசிகலா, மூர்த்தி, மற்றும் பொதுப்பணித்துறை மின்சாரத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமா வாத் பத்திரிக்கை ஊடக நிருபர்களுக்கு பேட்டி அளிக்க மறுத்துவிட்டார்.