விருதுநகர் வெடிவிபத்து; உயிரிழந்தோருக்கு தலா ரூ.3 லட்சம்!
சாத்தூர் அருகேவுள்ள மஞ்சள் ஓடைப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் புதன்கிழமை (ஜன.5) காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உயிரிழதோர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள இரங்கல்…
லட்சக்கணக்கான மக்களுக்கு ருத்ராட்ச தீட்சை வழங்கிய சத்குரு
கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ருத்ராட்ச தீட்சை வழங்கினார். ஆதியோகி முன்பு நேற்று முன்தினம் நடந்த இந்நிகழ்ச்சியில், ருத்ராட்சத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு பேசும்போது,”ருத்ராட்ச…
தமிழக மீனவர்கள் 12 பேர் விடுதலை..!
ராமநாதபுரம் மண்டபத்தில் இருந்து, தென் கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி…
மானாமதுரையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக 30 வாக்குச்சாவடிகள்
மானாமதுரை நகராட்சியாக மாற்றப்பட்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு 30 வாக்குச்சாவடிகள் அமைக்க கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மானாமதுரை தேர்வுநிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது . இதையடுத்து நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மானாமதுரை…
பொள்ளாச்சியில் வடிவேல் பட பாணியில் கொள்ளை முயற்சி!
பொள்ளாச்சி, சேத்துமடை அண்ணா நகர் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் கோவிலில் பூசாரியாக இருப்பவர் குமார்(45)! இவர் நேற்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்தபோது, கருவறையின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது. உள்ளே சென்று பார்த்தபோது, வாலிபர் ஒருவர் அம்மன்…
குப்பை மேலாண்மை தீர்வுக்கு 5 லட்சம் பரிசு!
தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கிட திடக்கழிவு மற்றும் மேலாண்மைக்கு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில அளவில் முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 2.5 லட்சம்,…
மதுரையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாள சந்திப்பு!
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்புக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் புதிதாக வந்துள்ள ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருந்தாலும்…
மதுரையில் செல்லூர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
மதுரையில், பொது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்யாமல் உள்ள திமுக அரசை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை டிஎம் கோர்ட்…
மதுரையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் – அமைச்சர் மூர்த்தி உறுதி
மதுரையில் தேவையான கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிச்சயம் நடைபெறும் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார். மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊமச்சிகுளம், செட்டிகுளம் கிராமத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி…
பொள்ளாச்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டம்!
பொள்ளாச்சியில், வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தானூ மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், முன்னாள் கவுன்சிலர்கள்…








