• Fri. Mar 29th, 2024

பொள்ளாச்சியில் நடைபெற்ற நகராட்சி கூட்டம்!

பொள்ளாச்சியில், வரும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அவசர ஆலோசனைக் கூட்டம் நகராட்சி கமிஷனர் தானூ மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முன்னாள் கவுன்சிலர்கள் கூறுகையில் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் சாக்கடை வசதி, சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளுக்கு நகராட்சி அதிகாரிகளிடம் கூறுகையில் கண்டுகொள்ளாமல் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் சிரமப்படுகின்றனர். இதை எடுத்து கூறி, மக்களிடம் வாக்கு சேகரிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்! மேலும், பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள சுடுகாடு தூய்மை படுத்தாமல் இறந்தவர்களின் உடல் மீது உடல் வைப்பதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டு உள்ளவர்களை அந்தந்த வார்டுகளில் ஓட்டளிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், முன்னாள் கவுன்சிலர்கள் நகராட்சி கமிஷனரிடம் வலியுறுத்தினர்.

பின்னர் இதுகுறித்து, நகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் பொதுமக்கள் எவ்வித சிரமும்யின்றி அவர்கள் வசிக்கும் பகுதிகளில் வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும், நடைபாதை வியாபாரிகள் நலன் கருதி அவர்களை சிரமமின்றி வியாபாரம் செய்ய செய்ய வழிவகுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கூட்டத்தில் பொறியாளர் குருமூர்த்தி, நகர செயலாளர் வடுகை பழனிச்சாமி, நகர துணைத் தலைவர் கார்த்திகேயன், வழக்கறிஞர் அதிபதி, முத்து, அமுதபாரதி, நவநீதகிருஷ்ணன், விஜயகுமார், பெருமாள், செந்தில், சிடிசி கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *