சொத்துவரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை!!
சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில்…
ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளியின் சார்பாக ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தமயந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெய் ஸ்ரீ வரவேற்று…
கல்லூரி படிக்கட்டில் தவறி விழுந்து மாணவி பலி..!
சென்னை வேப்பேரியில் உள்ள ஜெயின் மகளிர் கல்லூரியில் மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை வேப்பேரி பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆனது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி கடந்த 10…
கடன்செயலிகள் மூலம் பிளான் போட்டு திருடிய வடமாநில கும்பல்..,
ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்..!
சென்னையில் ஆன்லைன் கடன் செயலிகள் மூலம் பிளான் போட்டு திருடிய வடமாநில கும்பலை காவல்துறையினர் ஸ்கெட்ச் போட்டு தூக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னையை சேர்ந்த ஒருவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் ஆன்லைன் மூலம் கடன்…
விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு..!
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மானிய விலையில் பண்ணை இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தீவன உற்பத்தி இயக்கத் திட்டத்தின் கீழ் முன்னோடி விவசாயிகளை கால்நடை தீவன பயிர்…
ஆண்டிபட்டியில் ஆப்த மித்ரா பயிற்சி நிறைவு விழா.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது .நேற்று நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை…
ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகி ராஜன் தலைமை தாங்கினார் .துணைத்தலைவர் வரதராஜன் மற்றும் ஆணையாளர்கள் ரவிச்சந்திரன், மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 19…
கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் திறப்பு
கழுகுமலை அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ. பிளாண்டை கடம்பூர் ராஜூ எம்எல்ஏ திறந்து வைத்தார்.தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் ஆர்.ஓ.…
கோவை, நீலகிரியில் மிக கனமழை தொடரும்
கோவை ,நீலகிரி பகுதியில் மிக கனமழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.…








