


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் லிட்டில் பிளவர் பள்ளி சார்பாக ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் தமயந்தி முன்னிலை வகித்தார். ஆசிரியை ஜெய் ஸ்ரீ வரவேற்று பேசினார். பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி ஆசிரியர்களை தனித்தனியாக உச்சரித்து அவர்களுடைய திறமையை கூறி வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மதுரை லேடி டோக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியை சுகா ஜோஸ்வா கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்த்தையும், மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். ஆசிரியைகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியைகளின் ஆடல், பாடல் ,கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.


