சென்னை போக்குவரத்தில் மாற்றம்!
மழை நீர் தேங்கியுள்ளதால் கங்குரெட்டி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை, கணேசபுரம் சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.பேந்தியன்…
சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
சென்னையில் நேற்று இரவு (6.11.2021) முதல் வரலாறு காணாத தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. அதிகமான மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளான அண்ணாசாலை, வெலிங்டன் தியேட்டர் பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னைப் பெருநகரக் காவல்…
சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளில் முதல்வர் நேரில் ஆய்வு
சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில்…
தமிழகத்தில் விடியவிடிய பெய்த கனமழை
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.…
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட உள்ளதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று நண்பகல் வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர்,பர்மா காலனி,…
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு
தீபாவளிக்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி இருந்தது. இதை மீறி சென்னையில் பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு…
தமிழகத்தில் இரவு நேரத்தில் அதிக பட்டாசுகள்: அதிகரித்த காற்றுமாசுபாடு
தீபாவளி பண்டிகையையொட்டி இரவு நேரத்தில் அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்தி வரும் காற்று மாசுபாட்டின் அளவீடுகள் மூலமாக…
நரிக்குறவர், இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்
மாமல்லபுரம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதி சான்றிதழ்கள் மற்றும் நல வாரிய அட்டைகளை முதல்வர் வழங்கினார். ரூ.4.53 கோடி மதிப்பில் 282 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார்.…
சென்னையில் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…
அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி முதல்…
பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு – கமிஷனர் சங்கர் ஜிவால்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் அவர்கள் பேசியபோது, சென்னையில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 4 ஆம் தேதி வரை 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…








