

மழை நீர் தேங்கியுள்ளதால் கங்குரெட்டி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை, கணேசபுரம் சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது.
ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.பேந்தியன் ரவுண்டானாவில் இருந்து ராஜரத்தினம் மைதானம் நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் பேந்தியன் சாலை வழியாக செல்ல்லாம்.
மார்ஷல் ரோடிலிருந்து பேந்தியன் ரவுண்டானாவை நோக்கி வாகனங்கள் வர அனுமதி உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
