• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி..,

ByKalamegam Viswanathan

Sep 12, 2026

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்துல் கலாம் கிராமிய குழுவினர் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் குப்பைகளை தரம் பிரித்து நான்கு வண்ண குப்பை தொட்டிகளில் வழங்குதல் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை எடுத்தல் வர்த்தக உரிமம் மற்றும் சொத்துவரி குடிநீர் வரி தொழில் வரி ஆகியவற்றை முறையாக செலுத்துவதற்கு பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து

ஆடல் பாடல் நாடகங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமாக வாகனத்தில் ஒலிபெருக்கி மூலமாகவும் சோழவந்தானின் 18 வார்டுகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் கவுன்சிலர்கள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு நடைபெற்ற கலை நிகழ்ச்சயை பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.