

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட உள்ளதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் இன்று நண்பகல் வெளியேற்றப்பட உள்ளதால் கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர்,பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
