

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அ.ம.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் வருகிற நவம்பர் 6ஆம் தேதி முதல் 3 நாட்கள் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி 6ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.
7ஆம் தேதி கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலூர் மாவட்ட நிர்வாகிகள், 8-ந் தேதி புதுச்சேரி, கர்நாடக மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடக்கிறது.
மேலும் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
