

சென்னையில் நேற்று இரவு (6.11.2021) முதல் வரலாறு காணாத தொடர் மழையினால் பாதிக்கப்பட்டு சென்னை முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. அதிகமான மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளான அண்ணாசாலை, வெலிங்டன் தியேட்டர் பகுதி, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னைப் பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகம், தினத்தந்தி அலுவலகம், எழும்பூர் இரயில்வே நிலையம், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி, கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெள்ளநீர் வடிவதற்கான பணிகளை முடுக்கி விட துணை கண்காணிப்பு பொறியாளர், கோட்டப்பொறியாளர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
