குறள் 316
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமைவேண்டும் பிறன்கண் செயல்.பொருள் (மு.வ):ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.
குறள் 315:
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்தந்நோய்போல் போற்றாக் கடை.பொருள் (மு.வ):மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.
குறள் 314:
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல். பொருள் (மு. வ):
குறள் 313:
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்உய்யா விழுமந் தரும்.பொருள் (மு.வ):தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
குறள் 312:
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னாசெய்யாமை மாசற்றார் கோள்.பொருள் (மு.வ):ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்கு திரும்ப துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாகும்.
குறள் 311:
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். பொருள் (மு.வ): சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
குறள் 310:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. பொருள் (மு.வ): சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.
குறள் 309:
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி எனின் பொருள் (மு.வ): ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
குறள் 308:
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று. பொருள் (மு.வ): பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
குறள் 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று விளக்கம்: சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.