• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்

  • Home
  • குறள் 662

குறள் 662

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்ஆறென்பர் ஆய்ந்தவர் கோள் பொருள்(மு.வ):இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல்‌, வந்தபின்‌ தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்‌ திட்பம்‌ பற்றி ஆராய்ந்தவரின்‌ கொள்கையாம்‌.

குறள் 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ):ஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.

குறள் 661

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்மற்றைய எல்லாம் பிற பொருள்(மு.வ): ஒரு தொழிலின்‌ திட்பம்‌ என்று சொல்லப்படுவது ஒருவனுடைய மனத்தின்‌ திட்பமே (உறுதியே) ஆகும்‌; மற்றவை எல்லாம்‌ வேறானவை.

குறள் 660

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று பொருள்(மு.வ):வஞ்சனையான வழியால்‌ பொருளைச்‌ சேர்த்துக்‌ காப்பாற்றுதல்‌, பச்சை மண்கலத்துள்‌ நீரைவிட்டு அதைக்‌ காப்பாற்றி வைத்தாற்‌ போன்றது.

குறள் 659

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை பொருள் (மு.வ): பிறர்‌ வருந்துமாறு செய்து பெற்ற பொருள்‌ எல்லாம்‌ பெற்றவன்‌ வருந்துமாறு செய்து போய்விடும்‌; நல்வழியில்‌ வந்தவை இழக்கப்பட்டாலும்‌ பிறகு பயன்‌ தரும்‌.

குறள் 658

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்முடிந்தாலும் பீழை தரும் பொருள் (மு.வ): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல்‌ மேற்கொண்டு செய்தவர்க்கு, அச்‌ செயல்கள்‌ நிறைவேறினாலும்‌ துன்பமே கொடுக்கும்‌.

குறள் 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை பொருள்(மு.வ):பெற்ற தாயின்‌ பசியைக்‌ கண்டு வருந்த நேர்ந்தாலும்‌, சான்றோர்‌ பழிப்பதற்குக்‌ காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன்‌ செய்யக்கூடாது.

குறள் 656

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்கசான்றோர் பழிக்கும் வினை பொருள் (மு .வ): பெற்ற தாயின்‌ பசியைக்‌ கண்டு வருந்த நேர்ந்தாலும்‌, சான்றோர்‌ பழிப்பதற்குக்‌ காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன்‌ செய்யக்கூடாது.

குறள் 654:

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்நடுக்கற்ற காட்சி யவர் பொருள் (மு.வ): அசைவற்ற தெளிந்த அறிவினையுடையயவர்‌, துன்பத்தில்‌ சிக்குண்டாலும்‌ (அத்‌துன்பத்தைத்‌ தீர்ப்பதற்காகவும்‌) இழிவான செயல்களைச்‌ செய்யமாட்டார்‌.

குறள் 653

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினைஆஅதும் என்னு மவர் பொருள்(மு.வ): மேன்மேலும்‌ உயர்வோம்‌ என்று விரும்பி முயல்கின்றவர்‌ தம்முடைய புகழ்‌ கெடுவதற்குக்‌ காரணமான செயலைச்‌ செய்யாமல்‌ விடவேண்டும்‌.