இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய சமூக கட்டமைப்பு தான் சாதி. என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
இலங்கை சுற்றுப்பயணம் முடிவடைந்த நிலையில் அண்ணாமலை சென்னையில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தில் ஜாதி உள்ளதா, இல்லையா என்பது குறித்து விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:
இந்து மதத்தில் ஜாதி என்பது கிடையாது. சாதி என்பது கிறிஸ்தவ மிஷனரிகளால் உருவாக்கிய கட்டமைப்பு தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலை என்பது தான் பணியாக உள்ளது. ஆனால் பணியின் அடிப்படையில் நீ உயர்ந்தவன், நான் தாழ்ந்தவன் என்பது இந்து மதத்தில் ஒருபோதும் கிடையாது. ஒவ்வொருவரும் தங்களின் பணியை செய்கின்றனர்.
ஆனால் கிறிஸ்தவ மிஷனரிகள் வந்த பிறகு குறிப்பிட்ட பணி செய்வதன் மூலம் நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என பொய் கட்டமைப்புகளை உருவாக்கப்பட்டது. இதுதான் தற்போது நடந்து வருகிறது. கோவிலில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமித்தபோது முதல் கட்சியாக பாஜக அதனை வரவேற்றது. அதேநேரத்தில் ஒவ்வொரு கோவிலின் தன்மையை அரசு உணர்ந்து செயல்படவேண்டும் என கூறினோம்.
இந்த விஷயத்தில் கடைசி 200 ஆண்டில் உள்ளே வந்து குழப்பி விட்டனர். இதை மீட்டெடுக்கும் கட்டாயம் நமக்கு உள்ளது. பேச்சில் மட்டுமின்றி செயலினாலும் ஜாதி இல்லா சமுதாயம் உருவாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது.
மேலும் திமுக பதவியேற்று ஓராண்டு முடியும் தருவாயில் அதன் சாதனைக்கு வாழ்த்து தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு. அவர், எந்த சாதனைக்கு வாழ்த்து தெரிவிக்கிறது?. அவர்கள் தங்களுக்கான வேலையில் தவறு செய்தால் எதிர்க்கட்சியாக தட்டிக் கேட்போம். புகழ் பாடமாட்டோம்” என்றார்.