• Fri. Apr 26th, 2024

கட்சி துவங்கும் முன் 3 ஆயிரம் கி.மீ தூரம் பாதயாத்திரை செல்லும் பிரசாந்த் கிஷோர்

ByA.Tamilselvan

May 6, 2022

பீகாரில் 3 ஆயிரம் கி.மீ தூரம் பாதயாத்திரை செல்லவிருப்பதாக அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்
பாஜக,திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆட்சியைபிடிக்க அரசியல் வியூகம் அமைந்ததுக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.அவர் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு முன்னாதாக இயக்கம் ஒன்றை தொடங்கி அதனை அரசியல் கட்சியாக மாற்றவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், பீகாரை உயர்த்துவதற்காக அக்டோபர் 2ம் தேதி முதல் ‘பத்யாத்திரை’ நடத்த போவதாக இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் இன்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகாரில் ‘ஜன் சூரஜ்’ (மக்கள் நல்லாட்சி) தேர்தல் பிரசாரத்தை அக்டோபர் 2ம் தேதி மேற்கு சம்பாரண் காந்தி ஆசிரமத்தில் இருந்து 3000 கிமீ பாதயாத்திரையை தொடங்குகிறேன். மக்களை அவர்களின் அலுவலகங்களில் அணுகுவோம், அவர்களின் பிரச்னைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ள நேரில் சந்திப்போம். ஆனால் கட்சி தொடங்க போவதில்லை.
பீகாரில் பிரச்னைகளை அறிந்த சுமார் 17,000 முதல் 18,000 பேரிடம் பேச போகிறேன். அவர்களை ஒரே மேடையில் கொண்டு வர முயற்சிகிறேன். ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்துக்குள் இதை முடிக்க முடியும். விரும்பிய இலக்குகளை அடைய ஒரு அரசியல் தளம் தொடங்கப்பட வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அப்போது நாங்கள் முடிவு செய்வோம்.இருப்பினும், அது பிரசாந்த் கிஷோரின் கட்சியாக இருக்காது, அது மக்கள் கட்சியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரசாந்தகிஷோர் கட்சி துவங்குவரா அல்லது இயக்கத்தோடு நிறுத்திக்கொள்வார என்பது தெரியவில்லை.அவரது அரசியல் வருகை பல கட்சிகளுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *