அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா தி ரைஸ் படம் 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீசாகி வசூலை அள்ளியது. இப்படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா: தி ரூல் என்ற பெயரில் எடுக்கப்பட உள்ளது. சுகுமாறன் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, தனஞ்ஜயா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோரும் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத்து போக்குவரத்து போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர் தனது காரில் கலர்ஃபிலிம் ஒட்டியிருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்க்கெட் பகுதியில் அவரின் காரை தடுத்து நிறுத்திய போலீசார், கார் கண்ணாடியில் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளனர். அல்லு அர்ஜுன் மட்டுமின்றி இதே காரணத்திற்காக தெலுங்கு டைரக்டர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், கல்யாண் ராம், ஜுனியர் என்டிஆர், மஞ்சு மனோஜ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.