பல பிரம்மாண்ட வெற்றிப் படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சமீபத்தில், இவர் சரித்திர பின்னணியில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் வசூலில் சக்கைபோடு போட்டு வருகிறது! இந்நிலையில் ஆர் ஆர் ஆர் பட ப்ரமோஷனில் கலந்துகொண்ட எஸ்எஸ் ராஜமெளலி சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்களில் அசுரன் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என கூறியுள்ளார்.
மேலும் வெற்றிமாறனின் மேக்கிங் ஸ்டைல் ராவான கதைகளம் என அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவும் இன்ட்ரஸ்டிங்காக உள்ளது. வெற்றிமாறன் போல படங்கள் இயக்குவது கொஞ்சம் கஷ்டம் என பேசி உள்ளார் மேலும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இடம் நீங்கள் எந்த தமிழ் இயக்குனருடன் பணியாற்ற விருப்பப்படுகிறார்கள் என்று கேட்டதற்கு இருவரும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளனர்.