“வலிமை” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் அஜித்குமார் எச்,வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு தாற்காலிகமாக “AK61” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக நடிகர் அஜித்குமார் 20கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கப்படவுள்ளது. இதற்காக நடிகர் அஜித் குமார் இன்று ஹைதராபாத் சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.