• Thu. Apr 25th, 2024

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும்.. ஊரக வளர்ச்சி துறை செயலாளர் மீது வழக்கு!

உரிய தகுதிகள் இருந்தும், தனக்கு பதவி உயர்வு வழங்காததால் விரக்தியில் விருப்ப ஓய்வு பெற்ற இந்திய வனப்பணி அதிகாரி தமிழக அரசிடம் 1 கோடியே ஓராயிரம் ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

ஐ.எப்.எஸ் அதிகாரியான டாக்டர். ராமச்சந்திரன் தாக்கல் செய்த மனுவில், கடந்த 1981 ம் ஆண்டு உதவி வன பாதுகாவலராக பணியில் சேர்ந்த நிலையில், 1989 யில் இந்திய வனப்பணியில் (IFS)
சேர்ந்து 27 ஆண்டுகள் பணியாற்றியதாகவும், அண்ணா பல்கலைக்கழகத்த்தில் புதிதாக துவங்கப்பட்ட பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2008 ம் ஆண்டு அயல்பணியில் (Deputation) நியமிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், தகுதி பெற்றும்
தலைமை வனப்பாதுகாவலர் பதவி உயர்வு வழங்கப்படாததால்,
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கடந்த 2014 ம் ஆண்டில் வழக்கு தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான மன உளைச்சலின் காரணமாக அதே 2014 ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டதாகவும், தனக்கு தலைமை வனப் பாதுகாவலர் பதவி உயர்வு வழங்குவது குறித்து 2015 ம் ஆண்டு மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பல கட்ட போராட்டங்களுக்கு பின் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்தாண்டு (2020) பிறப்பித்த உத்தரவில், 2013 ம் ஆண்டு முன்தேதியிட்டு தன்னை தலைமை வன பாதுகாவலராக நியமித்து அரசாணை வெளியிட்டதாகவும், ஆனாலும் இதுநாள் வரை தனக்கு ஓய்வு கால பலன்களையும் தராமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட அவமதிப்புக்கும், தொந்தரவுகளுக்கும், மன உளைச்சலுக்கும் காரணமான ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான, சங்கர், மோகன் ஆகியோர் ஒரு கோடியே ஒராயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரியுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக பதிலளிக்குமாறு, ஊரக வளர்ச்சி துறை செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான, சங்கர், மோகன் மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணை செப்டம்பர் 6 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *