
பொள்ளாச்சி அருகே உள்ள உடுமலை சாலை செல்லப்பம்பாளையம் பிரிவில் நேற்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற நபர்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டனர்.
அருகில் இருந்தவர்கள்,விபத்துக்குள்ளானவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் அதி வேகமாக வந்த கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது, அதிவேகமாக வந்த கார், பைக் மீது மோதும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.