• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளர் எம்எல்ஏ நிவேதா முருகனை ஆதரித்து எம்.பி.கனிமொழி பரப்புரை..,

ByM.JEEVANANTHAM

Apr 19, 2026

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத்தொகுதி திமுக வேட்பாளர் எம்.எல்.ஏ.நிவேதா முருகனை ஆதரித்து திருக்கடையூர் கடைவீதியில் எம்.பி.கனிமொழி பிரச்சாரம் செய்து பேசுகையில் தொகுதி மறுவறையரை மசோதாவை தோற்கடித்ததால் நாடாளுமன்றத்தில் பாஜக முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

மகளிர் மசோதா என்று பொய்சொல்லி தமிழ்நாட்டிற்கு எதிரான மசோதாவை கொண்டுவந்தீர்கள், எங்கள் தலைவர் ஸ்டாலின் தோற்கடித்துள்ளார் என்று அதிமுக,பாஜகவினரை கேள்விகேளுங்கள் ஏன் தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தீர்கள் என்று எடப்பாடி எதுவும் சொல்ல மாட்டார் கையை கட்டிக்கொண்டு நிர்ப்பார். மழைவெள்ள நிவாரணம் கொடுத்தார்களா? நமது பிரதமர் ஆட்சிக்கு வந்த பிறகு நூறுநாள் வேலை கொடுத்து சம்பளம் கொடுத்ததார்களா. நூறுநாள் வேலையை நிறுத்த சட்டம்கொண்டு வந்திருக்கிறார் மோடி அதற்கு எடப்பாடி வாயைதிறந்து எதுவும் சொல்லமாட்டார்.

நமது பிள்ளைகள் ஹிந்தி படிக்கவில்லை என்று கூறி ரூ.3,600கோடி நிதியை நிறுத்திவைத்திருக்கிறார்கள். மகளிர் மசோதாவை நிறுத்திவிட்டோம் என்று சொல்கிறார்கள். 33 சதவிகிதத்தை கொடுத்தால் திமுக ஆதரிக்கும். இருப்பதில் பகிர்ந்துகொடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இன்றைய பசிக்கு இருப்பதை பகிர்ந்து கொடுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். ஆனால் புதிதாக பானை வைத்து சமைத்து கொண்டு வந்து கொடுக்கிறோம் என்று சொல்வது எங்களுக்கு வேண்டாம். தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி திட்டங்கள், தமிழ்மொழி வளர்க்க, ரயில்வே திட்டங்கள், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்கு ஏன் நிதி மற்றும் அனுமதி கொடுக்கவில்லை என்று கேளுங்கள்.

பெண்களின் பெயரால் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க நினைத்தவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் நீங்கள் கற்பிக்க வேண்டும். தளபதியின் கரத்தை பலப்படுத்த வேட்பாளர் நிவேதாமுருகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.