• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் மீது வழக்கு பதிவு..,

ByS.Ariyanayagam

Apr 19, 2026

திண்டுக்கல் மாநகராட்சி மேயர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் இன்று அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு நடைபெற்றது.

அப்போது திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்டோர் 100 மீட்டருக்கு முன்பாகவே வாக்கு சேகரித்தும், தடுக்க வந்த போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தும், போக்குவரத்துக்கு இடையூறு செய்தும், பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் வாக்கு சேகரித்தது தொடர்பாக

திண்டுக்கல் நகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்