தென்காசி மாவட்டம் புளியங்குடியில், இறந்தவர்களை பொதுப் பாதையில் கொண்டு சென்றதற்கு திருவண்ணாமலை மாவட்டம் கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சமூகத்தினர், பிற சமூக மக்களின் வீடுகளையும் உடமைகளையும் சூறையாடியதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டோருக்கு பாதுகாப்பு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
ஆர்ப்பாட்டத்தில் தென் மண்டல பொறுப்பாளர் பொதிகை ஆதவன், சிபிஎம் நகரச் செயலாளர் மணிகண்டன், எஸ்டிபிஐ நகர செயலாளர் தமிழ் அன்சாரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மின்வாரிய மாவட்ட துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் குருநாதன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் முத்துமாரி, மாவட்ட அமைப்பு செயலாளர் மகாலிங்கம், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் ராம்குமார் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் புளியங்குடி நகர செயலாளர் செல்வராஜ் நன்றி தெரிவித்தார்!