• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு..,

ByRadhakrishnan Thangaraj

Apr 18, 2026

ராஜபாளையம் அருகே சுற்று வட்டார பகுதிகளில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லாபாண்டியன்,(தமமுக) வெள்ளிக்கிழமை மாலை பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

ராஜபாளையம் அருகே சேத்தூர்,முகவூர், சுந்தரநாச்சியார்புரம்,
கணபதிசுந்தரநாச்சியார்புரம்,மற்றும் ரெங்கநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் பிரிசில்லா பாண்டியன் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது;
நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, நான் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது, மற்ற வேட்பாளர்களைப் போல நான் இல்லை. வெற்றி பெற்றால் கண்டிப்பாக ராஜபாளையம் பகுதியில் வீடு எடுத்து தங்கி பொதுமக்களுக்காக சேவை செய்வேன், மேலும் இப்பகுதியில் மாம்பழம் அதிகமாக விளைவதால் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்க வழிவகை செய்வேன், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன், நூல் உற்பத்தி மற்றும் நூல் விலைக்கான ஜிஎஸ்டி வரியை 0 சதவிதமாக குறைப்பேன். இப்பகுதியில் ஜவுளி பூங்கா அமைக்க ஏற்பாடு செய்வேன்,

எனவே நீங்கள் எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் என். எம். கிருஷ்ணராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் அழகாபுரியான்,அதிமுக நகர செயலாளர்(வடக்கு ) வழக்கறிஞர் முருகேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.