• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

செல்வகுமார் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்..,

ByKalamegam Viswanathan

Apr 19, 2026

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் பகுதியில் மக்கள் தமிழர் தேசம் கட்சி தலைவர் செல்வகுமார் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கப்பாண்டியனை ஆதரித்து பிரச்சாரம்.

மக்கள் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் கூறும் போது
எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்காலத்தில் முத்தரையர் மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குவேன் என பல்வேறு உறுதி அளித்தார்.

ஆனால் எதையும் செய்யவில்லை இதேபோல் மத்தியில் உள்ள பாஜக அரசும் நமது சமூகத்திற்கு உதவுவதாக கூறி எதுவுமே செய்யவில்லை ஆட்சியில் இருக்கும் போது நமது சமூகத்தை அதிமுக பாஜக இருவருமே பயன்படுத்தி வந்தனர் .

ஆனால் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களோ நமது கோரிக்கையை ஏற்று மக்கள் தமிழர் கட்சிக்கு திண்டுக்கல் நத்தம் தொகுதியில் இடம் ஒதுக்கி வாய்ப்பளித்தார்.

மேலும் நமது சமூக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவிக்க தயாராக உள்ளார் .

அதிமுகவை நம்புவதும் வேஸ்ட் பிஜேபியை நம்புவதும் வேஸ்ட் நல்லாட்சி நாயகர் முதல்வர் மு க ஸ்டாலின் 2.0 ஆட்சியை கொண்டுவர நமது சகோதரி கிருத்திகா தங்கப்பாண்டுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்

எனக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு அளித்ததாக உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி என்னை அவமதித்தார் என்னை அவமதித்தால் ஒவ்வொரு முத்தரையரையும் அவமதிப்பதற்கு சமம்.

தேர்தல் வந்தால் மட்டும் முத்திரையர் சமூக வாக்குகள் வேண்டும் என்பதற்காக எதையும் செய்யாமல் நம்மை பயன்படுத்தி கொள்ளும் அதிமுக பாஜகவை ஒதுக்கி தள்ளுவோம்.

பின்னர் பேசிய திமுக வேட்பாளர் கிருத்திகா தங்கபாண்டியன் திராவிட மாடல் முதல்வர் மு க ஸ்டாலின் 2.0 தலைமையில் 200க்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம்.

பெண்களுக்கு பாதுகாப்பளிக்கப்படும். நடப்பது பெண்களுக்கான ஆட்சி பெண்ணான எனக்கு தலைவர் வாய்பளித்துள்ளார்.

தாய்மார்கள் எனக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து உதயசூரியன் சின்னத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார்