மக்களவையில் உறுப்பினர்கள் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக மக்களவை சபாநாயகர் உத்தரவு
மக்களவை உறுப்பினர்கள் இடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களவையில் விலைவாசி உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.கூச்சல் எழுப்பியதுடன்,அவையை நடத்தவிடாமல் செய்ததாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில் அனைவரது இடைநீக்கத்தையும் ரத்து செய்து சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவிட்டுள்ளார். விலைவாசி உயர்வு குறித்து விவாதம் நடைபெறும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்பிக்கள் சஸ்பெண்ட் ரத்து
