அனைத்துக்கட்சி கூட்டத்தில் பெயர் பலகையை தன்பக்கம் இழுத்து வைத்துக்கொண்ட சம்பவம் குறித்து இது கேவலமாக இல்லையா என கேட்டுள்ளார் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
அதில் இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையிலான இரு அணிகள் சார்பாகவும் கலந்து கொண்டனர். இதில் இபிஎஸ் அணி சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் , ஓபிஎஸ் அணி சார்பாக கோவை செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது அதிமுக என்று வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை செல்வராஜ் அருகே இருந்ததால், அதனை ஜெயக்குமார் தன் பக்கம் இழுத்து வைத்துக்கொண்டார்.இச்சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சராக,எம்.எல்.ஏவாக இருந்தவருக்கு இதை செய்ய கேவலமாக இல்லையா என்று கோவை செல்வராஜ் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கேவலமாக இல்லை… கொந்தளித்த கோவை செல்வராஜ்
